கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் மூலம் விவசாயத்தில் பல்வேறு மாற்றங்கள் கொண்டுவர தீவிரம் காட்டி வருகின்றனர் இந்த நிலையில் கோவை மாவட்டம் ஆனைமலை அருகே ரமணமுதலிபுதூரில் விவசாயிகளுக்கான கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது,
இதனை தொடர்ந்து ஐந்து ஏக்கர் நெல் சாகுபடி செய்துள்ள நிலத்தில் மருந்து தெளிப்பதற்காக இன்று ட்ரோனை பயன்படுத்தி சுலபமாக 3 நிமிடத்தில் 5 ஏக்கர் நெல் பயிர் உள்ள நிலத்தில் மருந்துகள் தெளிப்பது குறித்து பயிற்சி
நடைபெற்றது.
இதனால் ஆட்கள் பற்றாக்குறை இருந்து சமாளித்துக் கொள்ள முடியும் எனவும் ஆட்களை வைத்து மருந்து தெளிப்பதற்கு ஒரு மணி நேரமாகும் எனவும் ட்ரோன் பயன்படுத்துவதன் மூலம் மூன்றே நிமிடத்தில் வேலை சுலபமாக முடியும் அதேபோல் ட்ரோன் மூலம் மருந்து தெளிக்கும் போது பயிருக்கு மட்டும் நேரடியாக செல்வதாகவும் மண் வளத்துக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது, இதில் 50 க்கு மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு ட்ரோன் பயன்பாட்டை தெரிந்து கொண்டனர்.