தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை சார்பில் திருச்சி அருகே உள்ள தனியார் பள்ளியில் நடந்த விழாவில் திருச்சி உட்பட 10 மாவட்டங்களைச் சேர்ந்த 308 தனியார் பள்ளிகளுக்கு அங்கீகார ஆணையை தமிழழ்நாடு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே என் நேரு பள்ளிக்கல்வித்துறை அன்பில் மகேஷ் பொய்யாமொழி வழங்கினார்.
தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் திருவெறும்பூர் அருகே உள்ள தனியார் பள்ளியில் நடந்த தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் ஆணை வழங்கும் விழாவிற்கு திருச்சி கலெக்டர் பிரதீப் குமார் தலைமை வகித்தார்.
நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே என் நேரு, பள்ளிக்கல்வித்துறை
அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர். அப்போது அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசியதாவது,
தற்பொழுது 10 மாவட்டத்தைச் சேர்ந்த முன்னிட்டு தனியார் பள்ளிகளுக்கு ஆணைகள் வழங்கப்படுவதாக தமிழகத்தில் 12 ஆயிரத்து31 தனியார் பள்ளிகள் உள்ளதாகவும்,
இதில் தமிழகத்தில் 56.9 லட்சம் மாணவர்கள்கல்வி பயின்று வருகின்றனர்நான் அரசு பள்ளிக்கு மட்டுமல்ல தனியார் பள்ளிமாணவர்களும் எங்களது குழந்தைகள் தான்.
இந்தியாவிலேயே தனியார் அமைப்புகளோடு சேர்ந்து மாணவர்களின் நலனை மேம்படுத்துவது தமிழகம் தான் முன்னோடியாக உள்ளது.
தனியார் பள்ளிகள் மாணவ மாணவிகளை தாய்மொழி ஆங்கில மொழியில் மட்டுமல்லாது. விளையாட்டுத் துறைகளும் ஊக்குவிக்க வேண்டும் என்றார்.
இதனை தொடர்ந்து அமைச்சர் கே என் நேரு பேசியதாவது,
மக்களுக்கு அரசு மட்டுமே எல்லாம் செய்ய முடியாது அதனால் அரசு வேலைவாய்ப்பு போல் தனியார் துறை வேலைவாய்ப்புகள் இருக்கிறது.
அதுபோல அரசு பள்ளிக்கு துணையாக தனியார் துறை பள்ளிகள் இருப்பது அரசுக்கு உதவியாகும்.
அதனால்தான் உங்களைதேடிவந்து தற்பொழுது ஆணைகளை வழங்குவதாகவும் இது திராவிட மாடலுக்கு எடுத்துக்காட்டு ஆகும்.
1989 ஆம் ஆண்டு அமைச்சரான பொது எங்களுக்கு எப்படி நடந்து கொள்ள வேண்டும் என கலைஞர்கூறினார் ஆனால் தற்பொழுது இந்த துறையின் அமைச்சராக இருப்பவர்கள் பதவியேற்ற அன்புடைய செயல்படுவதாக பாராட்டினார்.
பின்னர் திருச்சி, அரியலூர்,திண்டுக்கல், கரூர், புதுக்கோட்டை, பெரம்பலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர் ஆகிய 10 மாவட்டங்களை சேர்ந்த 308 தனியார் பள்ளிகளுக்கு அங்கீகார ஆணையை அமைச்சர்கள் கே என் நேரு , அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் வழங்கினர்.
இந்த விழாவில் கல்வித் துறை அதிகாரிகள், தனியார் பள்ளி நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.