மணிப்பூர் வன்முறை தொடர்பாக மத்திய பா.ஜனதா அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்துள்ளன. இந்த நம்பிக்கையில்லா தீர்மானம் மீது மக்களவையில் இன்று விவாதம் நடைபெற்றது. அப்போது மாநிலங்களவையில் அமளியில் ஈடுபட்டதாக திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. டெரிக் ஓ பிரையன் தொடர் முழுவதும் சஸ்பெண்டு செய்யப்பட்டார்.