திருச்சி மாவட்டம், மணிகண்டம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சூறாவளிபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பொன்னுசாமி(36). இவருடைய மனைவி சத்யா. இவர்களுக்கு இனியா , ஸ்ரீ வீரா என 2 குழந்தைகள் உள்ளனர். இவர்கள் கடந்த 2 நாட்களுக்கு முன்பு கணவன் மனைவி இருவருக்கும் இடையே குடும்பத் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் மனஉளைச்சலில் இருந்து சத்யா தனது குழந்தைகளுடன் வீட்டை விட்டு மாயமானார். நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை. சத்யாவை பல இடங்களில் தேடியும் கிடைக்காதால் கணவர் பொன்னுசாமி இது குறித்து மணிகண்டம் போலீஸ் ஸ்டேசனில் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
