Skip to content
Home » திருச்சியில் பிள்ளையார் சிலை முன்பு விவசாயிகள் தோப்புக்காரணம் போராட்டம்…..

திருச்சியில் பிள்ளையார் சிலை முன்பு விவசாயிகள் தோப்புக்காரணம் போராட்டம்…..

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில்
திருச்சி சிந்தாமணி அண்ணாசிலை எதிரில் பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில்  47 வது நாளான இன்று கர்நாடகா மாநில முதலமைச்சர் சீதாராமையாவை கண்டித்து பிள்ளையார் சிலை முன்பு தோப்பு காரணம் போடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் இந்த காத்திருப்பு போராட்டத்தின் கோரிக்கைகளாக:- 2016 – ல் வறட்சியின் பொழுது பெரிய விவசாயிகள் வாங்கிய கடனை தள்ளுபடி செய்யுங்கள் என்று உயர்நீதிமன்றம் கூறிய பிறகு , பெரிய விவசாயிகள் வாங்கிய குறுகிய கால கடனை விவசாயிகளின் கையெழுத்தை பெறாமலே போலியாக  கையெழுத்தை  போட்டு மத்திய கால கடனாக அதிமுக அரசு மாற்றி வைத்தது, ஆகையால்  விவசாய கடனை தள்ளுபடி செய்து விவசாயிகளை காப்பாற்ற வேண்டுகிறோம். மேட்டூரில் இருந்து வெள்ள நீராக கடலில் கலக்கும் வெள்ள நீரை மேட்டூர் அணையின் வடபுறம் கால்வாய் வெட்டி, அய்யாற்றுடன் இணைத்து சேலம், நாமக்கல், திருச்சி, பெரம்பலூர், அரியலூர் மாவட்ட விவசாயிகளை காப்பாற்ற வேண்டுகிறோம். அதேபோல் ஆலடியாறு டேமில், துளையிட்டு கீழ்கூடலூர், கம்பம், தேனி, பெரியகுளம், திண்டுக்கல், எரியோடு, கடவூர் வழியாக பொன்னியாறு டேமில் இணைத்தால், தேனி, மதுரை, திண்டுக்கல், கரூர், திருச்சி மாவட்ட விவசாயிகள் பயன்பெற முடியும் இதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்  காவிரியில் மேகதாது அணைக்கட்ட கூடாது என்றும் காவிரியில் மாத மாதம் தண்ணீர் திறக்க மத்திய அரசை வற்புறுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். விவசாயிகள் உரிமைக்காக ஜனநாயக நாட்டில் , டெல்லி சென்று போராட முதலமைச்சர் அனுமதி வழங்க வேண்டும் ,என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அய்யாகண்ணு

பேசியது. கர்நாடகா அரசு, பிரதமர் மோடியை கண்டித்து இவர்களுக்கு நல்ல புத்தியை கொடுக்க வேண்டுமென விநாயகர் சதுர்த்தி பண்டிகை ஒட்டி பிள்ளையார் சிலை முன்பு தோப்பு காரணம் போடும் போராட்டத்தில் ஈடுபட்டோம்.

இந்நாட்டில் விவசாயிகள் அடிமையாக உள்ளார்கள் ஆகையால், கடவுளாகிய விநாயகர் தான் விவசாயிகளை காப்பாற்ற வேண்டும் என்றார்.

விவசாயிகளை பாதுகாக்க வேண்டியது முதலமைச்சர் என் கடமை ஆகையால் காவேரியில் இருந்து உரிய தண்ணீரை திறப்பதற்கு பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி விவசாயிகளின் நலனை பார்க்க வேண்டும் என தெரிவித்தார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *