Skip to content

திருச்சியில் கிடா முட்டும் சண்டை விழா… அமைச்சர் மகேஷ்-ஆர்.எஸ்.பாரதி பங்கேற்பு..

கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில் கிடா முட்டும் சண்டை திருவிழா காட்டூர் மஞ்சள் திடல் பாலம் அருகே நடந்தது. மாவட்ட துணை தலைவர் ஆதத செங்குட்டுவன் தலைமை வகித்தார்.

தமிழக பள்ளிகல்வி துறை அமைச்சர்  மகேஷ், அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கிடா முட்டும் சண்டையை போட்டியை கொடி அசைத்து தொடங்கி வைத்தனர்.

இதில் திருச்சி, மதுரை, சேலம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 108 ஆட்டுக் கிடாய்கள் கலந்து கொண்டது.

அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசியதாவது….

ஒரு வருடத்தில் கலைஞரின் நூற்றாண்டு விழாவை 100 இடங்களில் நடத்த வேண்டும் என முடிவு செய்துள்ளதாகவும் அதன்படி தற்பொழுது 73 வது விழாவாக இந்த கிடா முட்டும் சண்டை திருவிழா 

நடைபெறுவதாகவும் அமைப்புச் செயலாளர் பாரதி எதிர்க்கட்சியாக இருக்கும் பொழுது கட்சியாக இருக்கும் பொழுதும் நாம் எப்படி செயல்பட வேண்டும் என்பதை பாடம் எடுத்தவர் நாம் எதிர் கட்சியாக இருந்த போது ஆளுங்கட்சியாக இருந்த ஜெயலலிதாவோடு முட்டி மோதியவர் ஆர் எஸ் பாரதி என்றும் அதற்கு பிறகு ஜெயலலிதா எங்கு போய் விழுந்தார் என்பது வரலாறு தற்போது வரை அவர்களுக்கு சிம்ம சொப்பனமாக உள்ளார் என்று கூறினார்.

ஆர். எஸ்.பாரதி பேசியதாவது…

இதுவரை திருச்சி மாவட்டத்தில் நடக்காத நிகழ்ச்சியாக கிடா முட்டும் சண்டை திருவிழா நடைபெறுகிறது தொடங்கி வைக்க தணக்கு வாய்ப்பளித்ததற்கு நன்றி

மோடிகூட்டம் போட சொல்கிறார் தமிழக முதல்வரும் ஆளுனரும் சந்தித்து பேச வேண்டும் என்று நான் ஒரு

அரசியல் மேடையில் பேசிய பொழுது ஆளுநருக்கு எதிராக பேசியதால் என்னையும் ஒரு கூட்டத்தில் அவரோடு சந்தித்து பேச சொல்கிறார்கள் இப்படி அவர்கள் அரசியல் நடத்துகிறார்கள் என்றார்.

இந்த கிடாய் முட்டும் போட்டியில்
கலந்துகொண்ட ஆட்டுக்கிடாய்களுக்கு எல்இடி டிவி, கிரைண்டர் ஆகியவை பரிசாக வழங்கப்பட்டது.

இந்த விழாவில் திமுக மாநகர செயலாளர் மதிவாணன், முன்னாள் எம்எல்ஏ சேகரன், திமுக பகுதி செயலாளர்கள் சிவகுமார், நீலமேகம் உட்பட கட்சியை நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *