மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு திருச்சி மாவட்ட நிர்வாகம் சார்பில் நேற்று 1 கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் அனுப்பிவைத்த நிலையில், இன்று 30 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்களை மாவட்ட ஆட்சித் தலைவர் அனுப்பி வைத்தார்
மிக்ஜாம் புயலால் சென்னை மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்களில் கன மழை பெய்ததால் பல இடங்களில் தண்ணீர் தேங்கி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது. இதனை துரிதப்படுத்த தமிழக முதல்வர் நேரில் ஆய்வு செய்து தேங்கி நிற்கும் தண்ணீரை உடனடியாக அகற்றவும் இயல்பு நிலை திரும்புவதற்கு நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
சென்னை பகுதியில் பல இடங்களில் தேங்கி நிற்கும் தண்ணீரை சென்னை மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழகம் முழுவதிலும் இருந்து நிவாரண பொருட்கள் வந்த வண்ணம் உள்ளன.
இந்நிலையில் நேற்று திருச்சி மாவட்டம் நிர்வாகம் சார்பில் 1 கோடி ரூபாய் மதிப்பிலான நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் இன்று சென்னையில் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு தேவையான அரிசி மளிகை பொருட்கள் போர்வைகள் பிஸ்கட் பாக்கெட்டுகள் பிரட் குடிநீர் பாட்டில்கள் என 30 லட்சம் மதிப்பிலான பொருட்களை மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார் இன்று வாகனத்தில் அனுப்பி வைத்தார்.