திருச்சியை அடுத்த இனாம்குளத்தூர், அண்ணா நகரை சேர்ந்த ஆறுமுகம் என்பவரது மகன் சாரதி என்கிற ருத்ரபாண்டியன் (21)தனியார் நிறுவன ஊழியரான இவர் நேற்று மதியம் வீட்டிலிருந்து புறப்பட்டு சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இந்நிலையில் இனாம்குளத்தூர் கந்தசாமி நகர் பகுதியில் ருத்ர பாண்டியன்
மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
இது குறித்து தகலறிந்து
இனாம்குளத்தூர் போலீசார்சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்த்தனர்.அப்பொழுது ருத்ர பாண்டியன் வாயில் நுரை தள்ளிய நிலையில் இறந்து கிடந்தார்.அவர் எப்படி இறந்தார் என்பது குறித்து எந்தவித தகவலும் இல்லை. இறந்த ருத்ரபாண்டியன்ஏதேனும் பிரச்சினையில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாரா அல்லது அவரை யாராவது கொலை செய்தார்களா? என்பது குறித்து இனாம்குளத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.