Skip to content

திருச்சி…. ஓய்வு அதிகாரி வீடு, கடையில் திருட்டு… சிக்கிய வாலிபர்..

திருச்சி தில்லைநகர் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திர குமார் (வயது 62) இவர் விற்பனை வரி அலுவலராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
சம்பவத்தன்று ராஜேந்திர குமார் தனது வீட்டில் உள்ள ஏ.சியை ஆன் செய்து உள்ளார். அப்போது ஏசி வேலை செய்யவில்லை. பின்னர் அவர் ஏசியை சோதனை செய்தபோது அதிலிருந்த காப்பர் ஒயர் திருடு போனது தெரியவந்தது. இதையடுத்து ராஜேந்திரகுமார் தில்லைநகர் போலீசில் புகார் செய்தார்.
இதேபோல் தில்லைநகர் 4-வது கிராஸ் பகுதியில் கார்த்திக் என்பவர் பல் பொருள் அங்காடி நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இவர் தனது பல்பொருள் அங்காடியை மூடிவிட்டு வீட்டுக்கு சென்றார். பின்னர் அடுத்த நாள் காலை வந்து பார்த்தபோது அங்கு இருந்த எடை போடும் எந்திரத்தை மர்ம நபர் திருடி சென்றது தெரியவந்தது. இதையடுத்து தில்லை நகர் போலீசில் புகார் செய்யப்பட்டது.
புகாரின் பேரில் திருச்சி உறையூர் காசிசெட்டி தெருவை சேர்ந்த தயானந்த் (19) என்பவர் இந்த இரண்டு திருட்டு சம்பவங்களையும் தொடர்பு உள்ளது என்பது தெரிய வந்தது. அவரை தில்லை நகர் போலீசார் கைது செய்தனர். இதேபோல் திருச்சி எடமலைப்பட்டி புதூர் விவேகானந்தர் தெருவில் நடை பயிற்சி சென்ற மூதாட்டியிடம் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ற மர்ம நபர்களை எடமலைப்பட்டி புதூர் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

error: Content is protected !!