திருச்சியை சேர்ந்த ஒரு இளம் பெண் சேலத்தில் பணியாற்றி வந்தார். இவர் புது பஸ் நிலையம் அருகே விடுதியில் தங்கியிருந்து வேலைக்கு சென்று வந்தார். சில தினங்களுக்கு முன் வேலைக்கு சென்ற அந்த பெண் திரும்பி வரவில்லை. இது குறித்து விடுதி தரப்பில், பள்ளப்பட்டி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் இது குறித்து விசாரணை நடத்தினர்.
அந்த பெண்ணின் போன் நம்பரை கண்டுபிடித்து அதன் செயல்பாடுகளை ஆய்வு செய்தபோது கடைசியாக சேலம் ஏற்காடு மலையில் இருந்து அந்த போன் பேசப்பட்டு உள்ளது. அதன் பிறகு அது சுவிட்ச் ஆப் ஆகிவிட்டது தெரியவந்தது.
இதற்கிடையே ஏற்காடு மலையில் ஒரு இளம்பெண் சடலமாக கிடப்பது கண்டுபிடிக்கப்பட்டு அந்த உடலை போலீசார் கைப்பற்றினர். அது விடுதியில் இருந்து மாயமான பெண் என தெரியவந்தது.
அந்த பெண்ணிடம் யார், யாரெல்லாம் பேசி உள்ளனர் என ஆய்வு செய்தபோது திருச்சியை சேர்ந்த ஒரு வாலிபர் தொடர்பில் இருந்தது தெரியவந்தது. எனவே அவரை சேலம் வரவழைத்து விசாரித்தபோது அவர்தான் அந்த பெண்ணை ஏற்காடு அழைத்து சென்று கொலை செய்தவர் என தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரிக்கிறார்கள். அவர் முன்னுக்கு பின் முரணாக மாற்றி மாற்றி பேசி வருகிறார்.
இவர்களுக்குள் எவ்வளவு நாள் தொடர்பு இருந்தது, ஏன் கொலை செய்தார் என போலீசார் விசாரிக்கிறார்கள்.