திருச்சி பாலக்கரை பீம நகர் பூமி பஜார் பகவதி அம்மன் கோவில் தெரு பகுதியைச் சேர்ந்தவர் சகாய சவேரி முத்து இவரது மகள் ஜெபி (வயது 23) 1ம் வகுப்பு வரை படித்துள்ள இவர் பெற்றோருக்கு துணையாக வீட்டில் இருந்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் ஜெபி திடீரென மாயமானார்.
பெற்றோர் சக தோழிகளிடம் விசாரித்த போது பூவரசன் என்ற வாலிபருடன் ஜெபிக்கு பழக்கம் இருந்தது தெரியவந்தது. ஆகவே ஆசை வார்த்தை கூறி பூவரசன் அவரை கடத்திச் சென்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது அதன் பேரில் பாலக்கரை போலீஸ் இன்ஸ்பெக்டர் நிக்ஸன் வழக்கு பதிவு செய்து கடத்தப்பட்ட ஜெபியை தேடி வருகிறார்.