திருச்சி மாவட்டம், சமயபுரம் அருகே உள்ள காவக்காரன் தெருவை சேர்ந்த முத்துசாமி மகன் சங்கிலிராஜா (32). இவர்
காய்கறி வியாபாரம் செய்து வருகிறார். இந்நிலையில் இன்று வியாபாரம் செய்வதற்காக அதிகாலை 3, மணி அளவில் திருச்சி காந்தி மார்க்கெட்டிற்கு காய்கறி வாங்குவதற்காக இருசக்கர வாகனத்தில் சென்றபோது திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கொன்டையன்பேட்டை மேம்பாலம் சென்று கொண்டிருந்தபோது பின்னால் வந்த வேன் மோதியதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவ்வழியாக சென்றவர்கள் ஸ்ரீரங்கம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சங்கிலி ராஜாவின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து ஸ்ரீரங்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்து ஏற்படுத்தி சென்ற வேன் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
