Skip to content
Home » மகளிர் தினம்…. திருச்சியில் பெண் தூய்மை பணியாளர்களுக்கு நினைவு பரிசு….

மகளிர் தினம்…. திருச்சியில் பெண் தூய்மை பணியாளர்களுக்கு நினைவு பரிசு….

  • by Senthil

உலக பெண்கள் தினத்தை முன்னிட்டு திருச்சி மாவட்டம், போச்சம்பட்டி கிராம பஞ்சாயத்தில் வியாழன் மேடு பகுதியில் உள்ள சமூதாய கூடத்தில் தூய்மை பணியாளர்களுடன் அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகம் மற்றும் மாற்றம் அமைப்பின் சார்பில் உலக பெண்கள் தினம் கொண்டாடப்பட்டது.

அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகத்தின் கொளரவ தலைவரும் முன்னாள் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியுமான நீதியரசர் கற்பகவிநாயகம் வழிகாட்டுதலின்படியும் அமைப்பின் நிறுவனர் & தலைவர் குமார் பொதுச்செயலாளர் சுப்பிரமணியம் ஆகியோரின் அறிவுரையின்படியும் திருச்சி மாவட்டம் போச்சம்பட்டி கிராமத்தில் தூய்மை பணியாளர்களாக பணிபுரிந்து வரும் பெண் தூய்மை பணியாளர்களுக்கு அவர்களுடைய சேவையை பாராட்டும் விதத்தில் அவர்களுக்கு நினைவு பரிசு மற்றும் பாராட்டு சான்று வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.

இந்த உலக பெண்கள் தினத்தில் திருச்சி மாவட்டம் போச்சம்பட்டி கிராம பஞ்சாயத்ததில் தினந்தோறும் வீடுகள் மற்றும் தெருக்களில் இருக்கும் குப்பைகளை அகற்றி வீடுகளில் தேங்கும் குப்பைகளை தினமும் வந்து பெற்று கொள்வதுடன் தெருக்களையும் சாலைகளில் உள்ள குப்பைகளை அகற்றுவதுடன் மக்கள் வசிக்கும் பகுதிகள் மற்றும்

சாலை தெருக்கள் சுத்தமாக இருக்கவும் சுற்றுச்சூழல் மாசு படாமல் பாதிக்கபடாமல் இருக்கவும் சிறப்பாக பணியாற்றி வருகின்ற 11 பெண் தூய்மை பணியாளர்களுக்கு சிறப்பு பரிசுகள் மற்றும் பாராட்டு சான்று வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகம் மற்றும் மாற்றம் அமைப்பின் நிர்வாகிகள் அமைப்பின் பொதுச்செயலாளரும் Bhel தேசிய தொழிற்சங்க தலைவருமான நடராஜா தலைமைதாங்கி நிகழ்வினை தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்வில் மகளிர் பிரவு செயலாளர் வழக்கறிஞர் கார்த்திகா இணைச்சொயலாளர் அல்லி கொடி அமைப்பின் நிர்வாகிகள் சித்ரா மூர்த்தி ஆனந்தி சொளந்தரம் சிபு நிவரஞ்சனி விளையாட்டு பிரிவு இணைச் செயலாளரும் குத்துச்சண்டை பயிற்ச்சியாளருமான எழில் மணி உலக சாதனையாளர் தர்னிகா வெங்கடேஷ் மற்றும் அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளரும் மாற்றம் அமைப்பின் நிர்வாகியும் நடிகருமான தாமஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டு நினைவு பரிசு மற்றும் பாராட்டு சான்றுகளை வழங்கி பாராட்டு மற்றும் வாழ்த்துக்களை தெரிவித்தனர். இந்நிகழ்ச்சியின் முடிவில் அனைவருக்கும் மரகன்றுகள் வழங்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!