Skip to content
Home » திருச்சி பெண் படுகொலை…. சேர்ந்து வாழ மறுத்ததால் கணவன் வெறி

திருச்சி பெண் படுகொலை…. சேர்ந்து வாழ மறுத்ததால் கணவன் வெறி

திருச்சி இடையாத்திமங்கலம் நடுத்தெருவைச் சேர்ந்தவர் அங்குசாமி மகன் சிவக்குமார் (வயது 39), பெயிண்டர். இவருக்கும், சமயபுரம் மருதூரை சேர்ந்த நர்மதாவுக்கும்(31) கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு குருபிரசாத் (8) என்ற மகனும், ரித்திகா (6) என்ற மகளும் உள்ளனர்.

இந்த நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக கணவன்-மனைவி இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர். கடந்த 3 வருடங்களாக நர்மதா தனது குழந்தைகளுடன் திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் – காங்கயம் சாலையில் ஓலப்பாளையம் அடுத்த சுக்குட்டிபாளையம் பிரிவில் உள்ள ஒரு தனியார் நூல் மில் குடியிருப்பில் தங்கி இருந்து அதே மில்லில் வேலை  செய்து வந்தார். பள்ளியில் படித்து வருகின்றனர். கடந்த சனிக்கிழமை குழந்தைகளை பார்க்க சிவக்குமார் வெள்ளகோவில் வந்தார். அடுத்த நாள் ஞாயிற்றுக்கிழமை தனது மகன் குருபிரசாத்தின் பிறந்தநாள் என்பதால் அதை கொண்டாடுவதற்காக அங்கேயே தங்கி உள்ளார். மில் குடியிருப்பில் நேற்று முன்தினம் இரவு சிறுவன் குருபிரசாத் பிறந்தநாளை குடும்பத்தினருடன் சேர்ந்து கொண்டாடி உள்ளனர். பின்னர் அனைவரும் தூங்க சென்றனர்.

நேற்று காலை சிவக்குமார்  தனது பைக்கில் வேகமாக சென்றார். அவரது வீட்டில் குழந்தைகள் வெகுநேரமாக அழுதுகொண்டிருந்ததால் அக்கம் பக்கத்தினர் சென்று  வீட்டு்ககுள் பார்த்தபோது நர்மதா  கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டு கிடந்தாள். குழந்தைகள் இருவரும் அழுதுகொண்டிரு்நதனர்.

மகனின் பிறந்தநாள் கொண்டாட்டம் முடிந்ததும்  சிவக்குமார், மனைவி நர்மதாவிடம் ஏன் இப்படி பிரிந்து வாழவேண்டும். நீ  என்னோடு வந்துவிடு என கூறி உள்ளார். அதற்கு அவர் மறுத்து விட்டார். இதனால் அவர்களுக்குள் சண்டை ஏற்பட்டுள்ளது. இந்த தகராறு முற்றியதால் ஆத்தி்ரமடைந்த சிவக்குமார் வீட்டில் கிடந்த  கத்தியை எடுத்து மனைவியை   கொலை செய்ததாக  கூறப்படுகிறது.

பைக்கில்வெளி்யே  சென்ற சிவக்குமார், காங்கேயம் போலீஸ் நிலையம் சென்று சரணடைந்து விட்டார். போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தினர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!