திருச்சி மாவட்டம், லால்குடி அருகே சேசசமுத்திரம் மேலகிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்தவர் 35 வயதான ஜான்சன். இவர் வெல்டராக வேலை செய்து வருகிறார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர்.இவர் நேற்று வாளாடி அருகே தத்தனூரில் உள்ள ஒய்வுபெற்ற தலைமையாசிரியர் சுப்பிரமணியன் என்பவர் வீட்டில் வெல்டிங் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக அவர் மீது மின்சாரம் தாக்கியது. இதைக் கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனை கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டார் என கூறினார்.
இது குறித்து தகவல் அறிந்த சமயபுரம் போலீசார் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்க்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.