திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட திருச்சி (மேற்கு) தொகுதி மற்றும் திருச்சி (கிழக்கு) சட்டமன்ற தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் இன்று திருச்சி மாநகராட்சி ஆணையர் வே.சரவணன் இன்று வெளியிட்டார். அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சி பிரதிநிதிகள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர் பொதுமக்கள் பார்வைக்கு வெளியிடப்பட்டது.
இதில் திருச்சிமேற்கு சட்டமன்ற தொகுதியில் ஆண் வாக்காளர்கள் 1,31,480, பெண் வாக்காளர்கள் 1,42,114, மற்றும் இதரர் 35 பேர் உள்ளனர். திருச்சி (கிழக்கு) சட்டமன்ற தொகுதியில் ஆண் வாக்காளர்கள் 1,23,902, பெண் வாக்காளர்கள் 1,32,128, மற்றும் இதரர் 71 பேர் உள்ளனர். வாக்காளர்கள் தங்களது வாக்காளர் பதிவு தொடர்பாக வரைவு வாக்காளர் பட்டியலினை பொதுமக்கள் 5 மண்டலங்களிலும் சரிபார்த்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டது.
வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடும் போது மத்திய மாவட்ட திராவிட முன்னேற்ற கழக மாவட்ட செயலாளர் க.வைரமணி ,மாநகராட்சி மேயர் மு. அன்பழகன்,அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக பகுதி செயலாளர் அன்பழகன், உதவி ஆணையர் . சசிகலா, மற்றும் பலர் கலந்து கொண்டார்கள்.