திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில், மக்கள் குறை தீர்க்கும் நாள் மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில்நடைபெற்றது. இக்கூட்டத்தில் இலவச வீட்டுமனைப் பட்டா, பட்டா மாறுதல், சாதிசான்றுகள், இதரச் சான்றுகள், குடும்பஅட்டை, முதியோர் உதவித் தொகை, நலத் திட்ட உதவிகள், அடிப்படைவசதிகள், திருமண உதவித் தொகை, பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்ட உதவிகள் உள்ளிட்ட பல்வேறுகோரிக்கைகளை வலியுறுத்திபொதுமக்களிடமிருந்து 500க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டது. இநத மனுக்கள் மீது உரியநடவடிக்கைகள் மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு மாவட்டஆட்சித்தலைவர் உத்தரவிட்டார். மேலும் நேற்று வருவாய் ஆய்வாளர் மீது தாக்குதல் நடந்ததை கண்டித்து அதிகாரிகள் கருப்பு பேஜ் அணிந்து வந்தனர். அரசு அதிகாரிகள் மீது யார் தாக்குதல் நடத்தினாலும் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கபடும் என திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் தெரிவித்தார்.
இந்நிலையில் திருச்சி மாவட்டம் பழனாகுடியை சேர்ந்த மேரி என்பவர் தனது குடும்பத்துடன் கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக அந்த ஊரில் வசித்து வருகிறார். இந்நிலையில் கடந்த 10 ஆண்டுகளாக கிறிஸ்துவ தேர் சப்பரம் எங்கள் வீட்டின் முன்பு நிற்காமல் செல்கிறது. இதுக்குறித்து கேட்டபோது உங்களை ஊர விட்டு ஒதுக்கி வைத்திருப்பதாக கூறினார்கள். என்ன காரணம் என்று கேட்டதற்கு எந்தவிதமான பதிலையும் சொல்லவில்லை என்றார். மேலும் எங்கள் ஊரில் வசிக்கும் மக்கள் யாரும் எங்களுடன் பேச கூடாது, எந்த உதவியும் செய்யகூடாது, குறிப்பாக குடிநீர் கூட தரகூடாது, இதனை மீறினால் அவர்களையும் ஊரைவிட்டு ஒதுக்கி வைக்கபட்டும் என அறிவித்துள்ளனர்.
இதனால் மனம் உடைந்து காவல்நிலையம், மாவட்ட நிர்வாக அதிகாரிகளிடம் பல புகார் தெரிவித்தும் இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆகையால் இன்று திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்ப்பு கூட்டத்தில் மாவட்ட ஆட்சியை சந்தித்து புகார் மனு கொடுத்தனர்.
அந்த மனுவில் கூறியது எங்களை ஊரைவிட்டு ஒதுக்கியவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கவேண்டும் . எங்களை தேவாலயங்களில் சென்று சாமி கும்பிட அனுமதி மறுக்கபட்டுள்ளது. ஆகையால் மேலும் இந்த ஆண்டு நடைபெற உள்ள கிறிஸ்துவ ஆலய தேர் சப்பரம் எங்கள் வீட்டின் முன்பு நிற்கவேண்டும், நாங்கள் சாமி கும்பிட வேண்டும் என்று குறிப்பிடபட்டுள்ளது.