திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் அதிமுகவின் வேட்பாளராக போட்டியிடும் கருப்பையாவிற்கு கூட்டணி கட்சியான தேசிய திராவிட முற்போக்கு கூட்டணியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் திருச்சி மரக்கடை பகுதியில் இன்று பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில்…
இந்த தேர்தலில் வெற்றி வேட்பாளராக போட்டியிடும் கருப்பையாவிற்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து வெற்றியை தர வேண்டும்.
நமது வேட்பாளர் வெற்றி பெற்றால் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கப்படும், வீட்டு வரி தண்ணீர் வரி உயர்த்திய திமுகவுக்கு நீங்கள் பாடம் புகட்ட வேண்டும்.
எம்பி தொகுதிக்காக ஒதுக்கப்படும் நிதியை முழுவதுமாக ஒதுக்கி சிறந்த முறையில் பணியாற்றுவார்.
முதியோர் பென்ஷன் உள்ளிட்டவர்களை பெற்று தருவார், துவாக்குடி சர்வீஸ் சாலை நீண்ட நாட்களாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. உடனடியாக பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வருவார், பெல் நிறுவனத்தில் பலர்
பணியாற்றினார்கள் ஆனால் மத்திய அரசு அது தனியார்மயமாக மாற்றி உள்ளது. அதனை அரசு நிறுவனமாக மாற்றி தொழிலாளர்களுக்கு வேலை வழங்கப்படும். காலையில் சென்று உங்களது ஓட்டை போட்டு விடுங்கள். இல்லை என்றால் கள்ள ஓட்டாக ஆளுங்கட்சியினர் மாற்றி விடுவார்கள்.
மூன்று தெய்வங்களும் ஆசியுடன் எடப்பாடி பழனிச்சாமியும் நானும் நல்ல ஒரு கூட்டணி அமைத்துள்ளோம்.
கேப்டனும், அம்மாவும் வெற்றி கூட்டணி அதே போல் பழனிச்சாமியும், பிரேமாவும்உருவாக்கி இருக்கிற இந்தக் கூட்டணியும் மக்கள் போற்றும் கூட்டணியாக, சாதனை படைக்கும் கூட்டணியாக அமையும் என தெரிவித்து
மக்களிடையே இரட்டை இலைக்கு வாய்ப்புக் கொடுப்பீர்களா? வேட்பாளர் கருப்பையாவுக்கு சரித்திர வெற்றி தருவீர்களா? உங்கள் குரலாக டெல்லியில் ஒலிக்க செய்வீர்களா?உங்கள் குரலாக டெல்லியில் ஒலிக்க செய்வீர்களா? என கேள்வி எழுப்பினார். தொடர்ந்து
இதை நான் ஏன் கேட்கிறேன் என்றால் மத்திய, மாநில அரசுகள் மக்களை வஞ்சிக்கிற கூட்டணியாக இருக்கிறது.
தமிழகத்தில் கொடுத்த எந்த வாக்குறுதியும் நிறைவேற்றவில்லை. மின்சார கட்டண உயர்வு, கேஸ் உயர்வு, விலைவாசி உயர்வு, தமிழகம் முழுவதும் என்று கஞ்சா விற்பனை அமோகமாக விற்பனையாகி கொண்டிருக்கிறது, சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியாக உள்ளது, பாலியல் வன்கொடுமை தமிழக முழுவதுமே சுலபமாக இருக்கிறது. இதற்கெல்லாம் தண்டனை மக்களாகிய நீங்கள் எப்போது தர முடியும் இந்த தேர்தலில் எடப்பாடி யார் சொல்வது போல ஒற்றை விரலால் ஓங்கி அடிப்போம் இரட்டை இலைக்கு வெற்றியை தாருங்கள் என கூறினார் கூறினார்.