திருச்சி மாவட்டம், துறையூர் அடுத்துள்ள உப்பிலியபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட வைரி செட்டிபாளையம் பகுதியில் கடந்த ஒரு வார் காலத்திறக்கு முன்பு விவசாயிகளின் வீடு மற்றும் வயல்களில் இருந்த ஆடு மற்றும் கோழிகளை தெருநாய்கள் கடித்து இறந்ததாக விவசாயி வெள்ளையன் மற்றும் பானுமதி கூறியுள்ளனர்
வெள்ளையன் வீட்டு தோட்டத்தில் இருந்த 8 ஆடுகள் பானுமதி வீட்டில் இருந்த 30 கோழிகள் ஆகியவற்றை தெரு நாய்கள் கடித்து கொன்றதாக தெரிவித்தனர் தொடர்ந்து ஊராட்சி நிர்வாகம் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதாக சமூக ஆர்வலர் மகேந்திரன் உடனடியாக தெரு நாய்களை கட்டுப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.