Skip to content
Home » திருச்சி வேங்கூர் தனியார் பள்ளி பிரின்சிபாலின் அத்துமீறல்கள்

திருச்சி வேங்கூர் தனியார் பள்ளி பிரின்சிபாலின் அத்துமீறல்கள்

  • by Authour

திருச்சி திருவெறும்பூர் அடுத்த வேங்கூரில் ஒரு தனியார்  பள்ளி செயல்படுகிறது.   இங்கு மெட்ரிக் மற்றும் சிபிஎஸ்சி பாடங்கள் போதிக்கப்படுகிறது.  சுமார் 3ஆயிரம் மாணவ, மாணவிகள் படிக்கிறார்கள்.  பள்ளியிலேயே விடுதியும் செயல்படுகிறது. அந்த பள்ளிக்கு திருச்சி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கிளைகள் உள்ளன.

வேங்கூர் பள்ளி  பிரின்சிபாலாக  இருக்கும் நபருக்கு  45 வயது இருக்கும். அவர் அங்குள்ள  40 வயது பெண்  ஊழியர் ஒருவரிடம்  அன்பு மிகுதியாகி ஆட்டம் போடுகிறாராம். இதை பார்த்த  மற்ற பெண் ஊழியர்கள் இந்த கொடுமைய எங்க போய் சொல்றது என தலையில் அடித்துக்கொள்கிறார்களாம்.

இதுபற்றி பள்ளி  ஊழியர்களிடம் விசாரித்தால், இந்த பிரின்சிபாலுக்கு இதே வேலையா போச்சு, ஒன்னா, இரண்டா என  எத சொல்ல என  கதை கதையாக சொல்கிறார்கள்.

இது என் தனிப்பட்ட விஷயம், என் மீது யாராவது  போலீசில் புகார் செய்திருக்கிறார்களா என இந்த அசிங்கத்தை நியாயப்படுத்தி  சட்டப்படி கேள்வி எழுப்புகிறாராம் பிரின்சிபால்.

போலீசுக்கு புகார் செல்லாத வரை  அவருக்கு  சட்டப்படி எந்த பிரச்னையும் இல்லை.  கல்விக்குழும நிர்வாகிகள், பள்ளியின்  நற்பெயருக்கு களங்கம் வரும் முன்  அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், இல்லாவிட்டால் அடுத்த கல்வி ஆண்டில் எங்கள் குழந்தைகளை வேறு பள்ளியில் தான் சேர்ப்போம்  என பெற்றோர்கள்  கூறுகிறார்கள்.

பிரின்சிபாலும்,  அந்த பெண் ஊழியரும்  பல்வேறு கோணங்களில்  எடுத்த புகைப்படங்கள் இப்போது சமூக வலைத்தளங்களில் வலம் வந்து கொண்டிருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *