கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரு கிலோ 200 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்ட சின்ன வெங்காயம் தற்போது கிலோ 10 ரூபாயாகக் குறைந்துள்ளது.
காலை உணவில் தொடங்கி சாம்பார், பிரியாணி, குழம்பு வகைகள் என தவிர்க்க முடியாத காய்கறியாக வெங்காயம் உள்ளது. வெங்காயத்தில் உள்ள இரும்பு சத்து உடலில் எளிதாக கலக்கும் தன்மை கொண்டது. எனவே அடித்தட்டு மக்களுக்கு வெங்காயம் என்பது அத்தியாவசியமான பொருளாக உள்ளது.
திருச்சி பால்பண்ணை வெங்காயம் மண்டியில் சின்ன வெங்காயம் பெரிய வெங்காயம், மொத்த வியாபாரம் செய்யப்படுகிறது.
தமிழகத்தை பொறுத்தவரை பெரம்பலூர் , அரியலூர், திருப்பூர், நாமக்கல் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சின்ன வெங்காயம் விளைச்சல் செய்யப்படுகிறது ..
திருச்சி பால்பண்ணை மொத்த வெங்காய மண்டியில் சின்ன வெங்காயம் விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது.
மேலும் கர்நாடக, ஆந்திரா, உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து பெரிய வெங்காயம் விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது.
வழக்கமாக 200 முதல் 300 டன் சின்ன வெங்காயம் மற்றும் பெரிய வெங்காயம் விற்பனைக்காக விவசாயிகள் கொண்டு வருவது வழக்கம்.
இன்று 500 டன் சின்ன வெங்காயம் 500 டன் பெரிய வெங்காயம் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டு உள்ளது.
இன்று காலை முதல் தற்போது வரை
500 டன் விற்பனையான நிலைகள் மீதமுள்ள 500 டன் விற்பனையாகாமல் தேக்கம் அடைந்துள்ளது.
கடந்த 10 நாட்களுக்கு முன்பு ஒரு கிலோ 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட சின்ன வெங்காயம், பெரிய வெங்காயம் தற்போது பத்து ரூபாய் முதல் 20 ரூபாய் வரை விலை கடுமையாக குறைந்து விற்பனை செய்யப்படுகிறது.
வெங்காயம் ஏற்றுமதியை மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளதால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் என வியாபாரிகள் குற்றச்சாட்டு தெரிவிக்கின்றனர்.
தற்போது இதே நிலைமை நீடித்தால் வெங்காயம் விளைச்சல் செய்யும் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு விளைச்சலை குறைப்பார்கள் எனவும். வரும் நாட்களில் வெங்காயத்தின் விலை கடுமையாக உயரும் என வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
சின்ன வெங்காயம் விலை குறைந்துள்ளது இல்லத்தரசிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தினாலும் விவசாயிகளை கவலையடைய வைத்துள்ளது.