Skip to content

திருச்சி விசிக ரயில் மறியல் முயற்சி, 45 பேர் கைது

  • by Authour

உள்துறை அமைச்சர் அமித்ஷா அம்பேத்கரை அவமதிக்கும் வகையில் நாடாளுமன்றத்தில் கருத்து  வெளியிட்டதை  கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி போராட்டம் நடத்தி வருகிறது.

திருச்சி  கிழக்கு மாநகர மாவட்ட விசிக செயலாளர் கனியமுதன் தலைமையில்
திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.போராட்டத்திற்கு தொழிலாளர் விடுதலை முன்னணி மாநில துணை செயலாளர் கவுன்சிலர் ந. பிரபாகரன் முன்னிலை வகித்தார்.
ரயில் நிலையத்திற்கு உள்ளே நுழைய முயன்ற போராட்டக்காரர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதனை தொடர்ந்து மறியலில் ஈடுபட்ட 45 பேரைபோலீசார் கைது செய்தனர்.
இந்த மறியல் போராட்டத்தில்
தொழிலாளர் விடுதலை முன்னணியின் மாநில துணைச் செயலாளர் கவுன்சிலர் ந.பிரபாகரன், இளம் சிறுத்தைகளின் எழுச்சி பாசறை மாநிலத் துணைச் செயலாளர் அரசு, மற்றும் நிர்வாகிகள் வழக்கறிஞர் சதீஷ், மாரியப்பன், கஸ்தூரி, செல்வகுமார், இனியவன், பிரபு, மணிகண்டன், ஞானம், முத்து, சேகர், ஆல்பர்ட்ராஜ், சகாயம், மீரான், பீர்முகமது, ரவிச்சந்திரன், விஜயன்
மகளிர் அணி நிர்வாகி கஸ்தூர்உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.

error: Content is protected !!