Skip to content
Home » திருச்சியில் விசிக சார்பில் தியாகி இமானுவேல் படத்திற்கு மலர்தூவி வீரவணக்கம்..

திருச்சியில் விசிக சார்பில் தியாகி இமானுவேல் படத்திற்கு மலர்தூவி வீரவணக்கம்..

  • by Senthil

தியாகி இமானுவேல் சேகரனாரின் 66 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு தமிழக முழுவதும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் அவரது திருவுருவ படத்திற்கு மலர் தூவி வீரவணக்கம் செலுத்தினர்.

இதன் தொடர்ச்சியாக திருச்சி மாவட்டம், நம்பர் ஒன் டோல்கேட் அருகே திருச்சி புறநகர் மாவட்ட விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் தியாகி இமானுவேல் சேகரன் திருவுருவ படத்திற்கு மலர் தூவி வீரவணக்கம் செலுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில்,செய்தியாளரிடம்….  திருச்சி கிழக்கு மாவட்ட செயலாளர் குரு அன்புச்செல்வன் தலைமையில், எழுச்சித்தமிழரின் கோரிக்கையை ஏற்ற தமிழக முதல்வர் தியாகி இமானுவேல் சேகரன் சொந்த ஊரான பரமக்குடியில் இம்மானுவேல் சேகரனார் வெங்கல திரு உருவ சிலை அமைப்பதற்கு மூன்று கோடியே நிதி ஒதுக்கிய முதல்வருக்கு நன்றியை தெரிவித்த விடுதலை சிறுத்தை கட்சி மாவட்ட செயலாளர்,

இந்நிகழ்வில் விடுதலை சிறுத்தைகள் கட்சி மண்டல செயலாளர் தமிநாதன், முன்னாள் மாவட்ட செயலாளர் நீலவாணன், தொகுதி செயலாளர் ஏகலைவன், துணை செயலாளர் மண்ணை சங்கர், ஒன்றிய செயலாளர் ராமு, துணைச் செயலாளர் மாரியப்பன், மாவட்ட பொறுப்பாளர் காசி ராஜேந்திரன், சமயபுரம் நகர பொறுப்பாளர் மணிபாரதி, தொழிலாளர் விடுதலை முன்னணியின் மாநிலத் துணைச் செயலாளர் விடுதலை இன்பன்,

முற்போக்கு மாணவர் கழகத்தின் மாநில துணைச் செயலாளர் வழக்கறிஞர் மதன்ராஜ், மகளிர் அணி சுதா, மண்ணச்சநல்லூர் தமிழ்செல்வன், பிரபு, லால்குடி சட்டமன்ற தொகுதி செயலாளர் மரியகமல், துணை செயலாளர் வாகை அரசு, மாவட்ட தொண்டர் அணி அமைப்பாளர் அன்பரசன, கல்லக்குடி நகர பொறுப்பாளர் கதிர்வேல், புள்ளம்பாடி ஒன்றிய செயலாளர் ரவீந்திரன், நித்திஷ், அருண்குமார், அன்பழகன், நடன கலை சூர்யா, ஒன்றிய செயலாளர் முத்துமணி மாவட்ட பொறுப்பாளர் சத்தியமூர்த்தி இளஞ்சிறுத்தைகள், மாவட்ட துணை அமைப்பாளர் திருமா ஏரோணி ஒன்றிய துணைச் செயலாளர் கோபி மற்றும் மாவட்ட ஒன்றிய நகர முகாம் பொறுப்பாளர்கள் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட விடுதலை சிறுத்தை கட்சியினர் தியாகி இமானுவேல் சேகரன் உருவப்படத்திற்கு மலர் தூவி வீரவணக்கம் செலுத்தினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!