திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே சிறுகனூரில் வருகின்ற 26 ம் தேதி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முப்பெரும் விழா நடைபெறும் மாநாட்டு திடலை தமிழக முதல்வரின் பாதுகாப்பு பிரிவு அதிகாரி இன்று ஆய்வு செய்தார். வருகின்ற 26 ந்தேதி நடைபெறும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வெல்லும் ஜனநாயகம் பிரம்மாண்ட மாநாட்டில் தமிழக முதல்வர், அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் உட்பட அகில இந்திய, மாநில கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்கின்றனர்.தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 5லட்சம் தொண்டர்கள் மாநாட்டில் பங்கேற்கின்றனர்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வெல்லும் ஜனநாயகம் என்ற தலைப்பில் வருகின்ற 26ஆம் தேதி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தேர்தல் அரசியல் வெள்ளிவிழா
கட்சித் தலைமையின் அகவை 60 மணிவிழா,இந்தியா கூட்டணி தேர்தல் வெற்றி கால்கோள்விழா என முப்பெரும் விழாவாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன் தலைமையில் மாநாடு நடைபெறுகிறது.
இம் மாநாடு திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே சிறுகனூரில் சுமார் 50 ஏக்கர் பரப்பளவில் நடைபெறுகிறது. இதில் தமிழ்நாடு, புதுச்சேரி, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, கேரளா மற்றும் மகாராஷ்டிராவை மாநிலத்தைச்
சேர்ந்த விடுதலை சிறுத்தை கட்சியினர் சுமார் 5லட்சம் பேர் திரளாக கலந்து கொள்கின்றனர். மாலை 4 மணி அளவில் மாநாடு துவங்க உள்ளது.
மாநாட்டிற்கான மேடை அமைக்கும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மாநாட்டு திடலை இன்று தமிழக முதல்வரின் பாதுகாப்பு பிரிவின் அதிகாரி டி.ஐ.ஜி.திருநாவுக்கரசர், விடுதலை சிறுத்தை கட்சியின் பொதுச் செயலாளரும், விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவிக்குமார், பாராளுமன்ற உறுப்பினர் தொல். திருமாவளவனின் தனிசெயலாளர் தயாளன், திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வருண்குமார் ஆகியோர் மாநாட்டு பணிகளை ஆய்வு மேற்க்கொண்டனர்