Skip to content
Home » திருச்சியில் வ.உசியின் திருவுருவ சிலைக்கு அமைச்சர்கள் மரியாதை…

திருச்சியில் வ.உசியின் திருவுருவ சிலைக்கு அமைச்சர்கள் மரியாதை…

சுதந்திர போராட்ட வீரரும், கப்பலோட்டிய தமிழன் ஐயா வ.உ.சி 152 வது பிறந்த பிறந்தநாளை முன்னிட்டு இன்று திருச்சி நீதிமன்றம் அருகில் உள்ள வ.உ.சி திரு உருவச் சிலைக்கு திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில் திருச்சி தெற்கு மாவட்ட கழக செயலாளரும், பள்ளி கல்வித்துறை அமைச்சர்  மகேஷ்  மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர் கூறுகையில் :-

வ.உ.சி ஒரு அமைப்புக்கு மட்டும் சொந்தமானவர் அல்ல. அவர் இந்திய நாட்டிற்கு சொந்தமானவர். நான் பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக பொறுப்பேற்றவுடன் முதல்வர் எனக்கு அளித்த முதல் கட்டளை வ.உ.சி வாழ்க்கை வரலாறு சம்பந்தமான புத்தகத்தை வெளியிட வேண்டும். அதன்படி தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை பொது நூலக துறையின் சார்பாக தயாரித்து வெளியிட இருக்கின்றோம் என தெரிவித்தார்.

இந்நிகழ்வில் கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ், மாநகரக் கழக செயலாளர் மு.மதிவாணன்,

மாவட்டத் துணைச் செயலாளர் செங்குட்டுவன், மூக்கன், லீலாவேலு, வ.உ.சி பேரவை நிர்வாகிகள் ஹரிஹரன், செந்தில் மற்றும் மாநகர பகுதி பேரூர் ஒன்றிய கழக நிர்வாகிகள் அணிகளின் அமைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

அதனைத் தொடர்ந்து வா உ சி திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்த தமிழ்நாடு நகர்புற வளர்ச்சி துறை அமைச்சர் கே.என்.நேரு மரியாதை செலுத்தினார்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சருக்கு கூறுகையில் :-

போர்வெல் எங்கு போட்டாலும் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். மாவட்ட ஆட்சியரை விட்டு சமாதானம் செய்து தான் சரி செய்யப்படும்.
மாற்று ஏற்பாடு இருந்தால் அந்த மாற்று ஏற்பாடுகள் செய்வோம்.

இந்தியா கூட்டணியில் கூட்டணியில் உள்ளவர்களே அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார்கள் என்ற கேள்விக்கு..

அதெல்லாம் ஒரு பேச்சா.

உ பி மாநிலத்தில் உள்ள அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைக்கு 10 கோடி என சொல்லி இருக்கிறார் என்ற கேள்விக்கு…

இதற்கு அமைச்சர் உதயநிதியை சொல்லிவிட்டார் 10 கோடி அல்ல பத்து ரூபாய் கொடுத்தால் சீப்பு வாங்கி தலையை சீவிக் கொள்வேன் என்று சொல்லிவிட்டார்.
அவரால் சீவ முடியுமா.

எங்களுடைய கொள்கை தந்தை பெரியாருடைய கொள்கை எல்லா மக்களும் சமம் என்ற முறையிலே அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அந்தக் கொள்கையில் உறுதியாக இருக்கிறோம் அதை எதிர்க்கின்ற கொள்கையை வேறொருப்போம்.

28 பேரும் ஒன்றாக இருப்பார்களா, ஆட்சிக்கு வர வேண்டும் என்ற விஷயத்தில் அனைவரும் ஒன்றாக இருக்கிறோம்.
கொள்கை மாறுபாடு இருப்பதெல்லாம் என்கிட்ட கேட்கிறீர்களே.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!