திருச்சி மாவட்டம் சிறுகனூர் அருகே பி.கே.அகரத்தில் தமிழ்நாடு வனத்துறை சார்பில் தகவல் அறியும் உரிமை சட்டம் குறித்து பொதுமக்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி ஊராட்சி மன்ற தலைவர் மங்கையர்க்கரசி சோமசுந்தரம் தலைமையில் இன்று நடைபெற்றது.
தமிழ்நாடு வனத்துறை சார்பில் 2023 ம் ஆண்டுக்கான தகவல் அறியும் உரிமைச் சட்டம் குறித்து வார விழா அக்டோபர் 5 ம் தேதி முதல் 12 ம் தேதி வரை நடைபெறுகிறது. அதன் ஒரு
பகுதியாக இன்று பி.கே.அகரம் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட பணியாளர்களுக்கு தகவல் அறியும் உரிமைச் சட்டம் குறித்து வனச்சரக அலுவலர் கிருஷ்ணன் விழிப்புணர்வை ஏற்படுத்தி சிறப்புரையாற்றினார்.
இந்நிகழ்வில் வனச்சரக அலுவலர் ரவி வனவா கோகிலா ஊராட்சி செயலாளர் இளையராஜா வார்டு உறுப்பினர்கள் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.