திருச்சி மாவட்டத்தில் உள்ள நத்தர்ஷா பள்ளிவாசலில் மமக பொதுச்செயலாளரும்,வக்பு வாரிய உறுப்பினருமான ப.அப்துல் சமத் வக்புக்கு உட்பட்ட இடங்களை ஆய்வு செய்தார். வக்பு வாரிய உறுப்பினர்கள் ஆளூர் ஷாநவாஸ் MLA அவர்களும்,பஷீர் அவர்களும் உடன் ஆய்வு செய்தனர். மேலும் இந்நிகழ்வில் திருச்சி
கிழக்கு மாவட்ட தலைவர் M .A .முகமது ராஜா,மமக செயலாளர் அஷ்ரப் அலி,மாவட்ட பொருளாளர் காஜா மொய்தீன், மாவட்டத் துணைத் தலைவர் மு. சையது முஸ்தபா, மற்றும் மாவட்ட துணை அணி நிர்வாகிகள், மற்றும் மேற்கு மாவட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.