திருச்சி, திருவரம்பூர் காவல் சரக எல்லைக்குட்பட்ட காட்டூர் காவேரி நகர் பகுதியை சேர்ந்தவர் மனோகரன்(70).
இவர் காட்டூர் தேவாலயம் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று அவர் மீது மோதிவிட்டு சென்றுள்ளது. இதில் மனோகரனுக்கு தலையில் காயம் ஏற்பட்டு திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் சிகிக்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இச்சம்பவம் குறித்து மனோகரனின் மகன் பாலசுப்பிரமணியன் திருவெரம்பூர் போலீஸ் ஸ்டேசனில் புகார் அளித்தார். இப்புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.