திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே பிச்சாண்டார் கோயில் ஊராட்சியில் உள்ள உத்தமர் கோயிலில் ஆடி மூல நட்சத்திரத்தை முன்னிட்டு அருனகிரி நாதருக்கு குருபூஜை விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. மும்மூர்த்திகளும், முப்பெரும் தேவிகளும் குடி கொண்டிருக்கும் அருள்மிகு உத்தமர் கோயில் பிச்சாண்டார் கோயில் ஊராட்சியில் அமைந்துள்ளது. இக்கோயிலில் ஆடி மூல நட்சத்திரத்தை முன்னிட்டு அருணகிரிநாதருக்கு குருபூஜை விழா வெகு விமரிசையாக நடைபெற்றது
காலையில் மூலவர் முருகப் பெருமானுக்கு சிறப்பு அலங்காரம் செய்து மகா அபிஷேகம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து மாலையில் முருகப்பெருமான் மயில் வாகனத்தில் திருவீதி உலா நடைபெற்றது. இந்த திருவீதி உலா முக்கிய வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் தலைமையில் கோயில் குருக்கள்கள், கிராம பொதுமக்கள், பக்தர்கள் செய்திருந்தனர்.