திருச்சி, அரியமங்கலம் பகுதியில் உருமு நாதர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் இரவு அர்ச்சகர் மணிகண்டன் பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்று விட்டார். மறுநாள் காலை வந்து பார்த்த பொழுது கோவிலின் நுழைவாயில் கேட்டு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்த பொழுது மர்ம ஆசாமி ஒருவர் கோவிலுக்குள் இருந்த பித்தளை அகல் விளக்கு மற்றும் பித்தளை மணியை திருடி உள்ளார்.இது குறித்து அர்ச்சகர் மணிகண்டன் அரியமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து சந்தேகத்தின் பெயரில் லால்குடி அருகே உள்ள பரமசிவபுரத்தை சேர்ந்த மகேஸ்வரன் (வயது 72)என்ற முதியவரை கைது செய்து அவரிடமிருந்து பூஜை பொருட்களை பறிமுதல் செய்துள்ளனர்.