திருச்சி மலைக்கோட்டையில் எழுந்தருளி இருக்கும் தாயுமானவர் சுவாமிக்கு மலர்கள் தொடுத்து சாரமா முனிவர் என்பவர் வழிபட்டு வந்தார் – ஒருமுறை சரமா முனிவர் உடைய தோட்டத்தில் உறையூரை ஆண்டு வந்த பராந்தக சோழனது சேவகன் மலர்களை பறித்து வந்தான் – சாரம முனிவர் சேவகனை பிடித்து ஏன் மலர்களைப் பறிக்கிறாய் என்று கேட்டபோது மன்னனுக்காக தான் என்று கூறினார்.
இதனையடுத்து உடனடியாக சோழனுடைய அரண்மனைக்குள் நுழைந்த சாரமா முனிவர் எப்படி மலர்களை பரிக்கலாம் என்று கேள்வி கேட்டபோது சாரம முனிவரை அவமானப்படுத்தி மன்னன் அனுப்பினார் – இதனை அடுத்து உறையூரை நோக்கி மண் மாரி மழை பெய்யும் என்று சாரம முனிவர் சாபமிட்டார்.
மண் மழை பொழிந்து உறையூர் நகரில் வாழ்ந்த மக்கள் அனைவரும் கடுமையாக பாதிக்கப்பட்ட போது மக்களை காப்பதற்காக வெக்காளியம்மன் அவதரித்தார்.
மண் மாரி மழை பெய்த போது உறையூர் மக்களை காத்தருளியாக வெக்காளியம்மன் அன்று முதல் இன்று வரை வெட்ட வெளியில்
அமர்ந்து மக்களின் துயரங்களை தீர்த்து வருகிறார்.
இத்தகைய சிறப்பு கொண்ட உறையூர் அருள்மிகு வெக்காளியம்மன் திருக்கோவிலில் கடந்த வாரம் சித்திரை தேர் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது நாள்தோறும் அம்மன் பல்வேறு வாகனங்களில் எழுந்துருளி திருக்கோவிலை சுற்றி உள்ள பிரகாரங்களில் வலம் வந்தார்.
வெக்காளியம்மன் திருக்கோவில் திரு தேரோட்டத்தை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் காவிரி ஆற்றிலிருந்து பால் குடங்களை எடுத்து வந்து வழிபட்டு வருகின்றனர் – இதே போல் நூற்றுக்கணக்கான மக்கள் அக்னி சட்டைகளை ஏந்தியவாறு உறையூர் வெக்காளியம்மன் ஆலயத்தை வளம் வந்து தங்களது நேர்த்தி கடனை செலுத்தி வருகின்றனர்.
திருத்தேரில் எழுந்தருளி இருக்கும் அருள்மிகு வெக்காளியம்மன் வழிபடுவதற்காக ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்வார்கள் என்பதால் ஆங்காங்கே நீர் மோர்
பானக்கம் மற்றும் அன்னதானம் போன்றவை தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.
சரியாக 10 மணி அளவில் திருத்தேர் வடம் பிடிக்கப்பட்ட நிலையில் 4 ரத வீதிகளில் எழில் மிகு காட்சியுடன் வெக்காளியம்மன் வீதி உலா வந்தார். வெக்காளியம்மன் திருக்கோவில் தேரோட்டத்தை முன்னிட்டு சுமார் 500க்கும் அதிகமான காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.