Skip to content

திருச்சி பாரதிதாசன் பல்கலையில் உதவி மையம்…..அமைச்சர் கோவி.செழியன் தொடங்கி வைத்தார்

  • by Authour

உயர் கல்வித் துறை நிறுவனங்களில் மாணவ மாணவியர் மற்றும் பெற்றோர்கள் எளிதில் அணுகுவதற்கும் அவர்கள் கேட்கும் விவரங்கள் உடனடியாக கிடைத்திடவும் அனைத்து உயர்கல்வி நிறுவனங்களிலும் மேற்படி தகவல்களை அளிப்பதற்கு உதவி மையம் அமைக்க  தமிழ்நாடு முதலமைச்சர்  ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

முதல்வரின் ஆணைக்கிணங்க அனைத்து உயர் கல்வி நிறுவனங்களிலும் உதவி மையங்கள் நிறுவப்பட வேண்டும் என்று ஆணையிடப்பட்டடுள்ளது.

அதன்படி இன்று (12.11.2024) காலை 8.30 மணி அளவில் பாரதிதாசன் பல்கலை கழக வளாகத்தில் உதவி மையத்தை உயர் கல்வித் துறை அமைச்சர் .கோவி.செழியன் தொடங்கி வைத்தார்.

உயர்கல்வித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் டாக்டர்.கே.கோபால், தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்ற துணைத் தலைவர்  எம்.பி.விஜயகுமார்,(ஓய்வு) , திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் .மா.பிரதீப்குமார், பாரதிதாசன் பல்கலைக்கழக துணை வேந்தர்  செல்வம். அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர்  ரவி மற்றும் உயர் அலுவலர்கள்  கலந்து கொண்டனர்.

மாண்புமிகு உயர் கல்வித்துறை அமைச்சர் அவர்கள் அது சமயம். உதவி மையம் மூன்று வகையான சேவைகளை வழங்க வேண்டும் என அறிவுறுத்தினார்.

இணைய வழியில் கோரப்படும் தகவல்கள், தொலைபேசி வழியாக கோரப்படும் தகவல்கள் மற்றும் நேரடியாக கேட்கப்படும் தகவல்கள் என மூன்றையும் ஒருங்கிணைத்து உதவி மையம் செயல்பட வேண்டும். ஒவ்வொரு நாளும் மேற்படி மூன்று வழிகளில் பெறப்படும் கோரிக்கைகள் குறித்த விவரங்களை பதிவு செய்து வைக்கவும், அதனை கண்காணிக்கவும் உயர் கல்வித்துறை அமைச்சர்  அறிவுறுத்தினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!