திருச்சி மாவட்டம், லால்குடி அருகே தமிழ்நாடு நீர்ப்பாசன வேளாண்மை நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ் செயல்பட்டு வரும் புள்ளம்பாடி அருகே சாத்தப்பாடி கிராமத்தில் உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் செயல்பாடுகளை உலகவங்கி அதிகாரிகளான ஜூப் ஸ்டாவ் டிஸ்டிக்,சஞ்சித்குமார், குந்தன் சிங் ஆய்வு செய்தனர்.
அப்போது MDPU அலுவலர்கள் கிருஷ்ணன், கஜேந்திர பாண்டியன் மற்றும் துணை இயக்குநர் சரவணன், வேளாண் அலுவலர் சிவகாமி, திட்ட இயக்குனர் ஜார்ஜ் மேமன் உடனிருந்தனர்.