திருச்சி, திருவெறும்பூர் அருகே உள்ள காட்டூர் பாலாஜி நகர் 12வது தெருவை சேர்ந்தவர் தாசய்யா (87) இவர் நேற்று திருச்சியில் தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் பாலாஜி நகர் அருகே நடந்து சென்று கொண்டிருந்த பொழுது பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் கீழே விழுந்த தாசய்யாவை அருகில் உள்ளவர்கள் காப்பாற்றி திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த தாசய்யா சிகிச்சை பலன் இல்லாமல் இன்று பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து திருவெறும்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.