ஸ்ரீரங்கம் மருதாண்டக்குறிச்சி அரவனூர் பகுதியைச் சேர்ந்தவர் அஜிதா( 40). இவர் மருதாண்டக்குறிச்சி மாரியம்மன் கோவில் அருகே டூவீலரில் சென்றுக்கொண்டிருந்தார். அப்போது இவருக்கு எதிரே வந்த அடையாளம் தெரியாத டூவீலர் ஒன்று இவர் மீது மோதி விபத்து ஏற்படுத்தியது. இந்த விபத்தில் டூவீலரில் இருந்து கீழே விழுந்த அஜிதா தோள்பட்டை மற்றும் முகம் பகுதியில் காயம் அடைந்து திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்த விபத்து சம்பவம் குறித்து காயம் அடைந்த அஜிதா அளித்த புகாரின் பேரில் சோமரசம்பேட்டை காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.