திருச்சி தென்னூர், அருகே உள்ள வீரமாமுனிவர் தெரு முனையில் சாலை மற்றும் பாதாள சாக்கடை பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் வாகன ஓட்டி ஒருவர் தடுமாறி விழுந்து விட்டார். உடனடியாக அக்கம் பக்கத்தினர் அவரையும், வாகனத்தையும் மீட்டனர். இந்த ஆபத்தான சாலையில் தினம் தினம் வாகன ஓட்டிகள் விழுவது வாடிக்கையாகி வருகிறது. எனவே, உடனடியாக இந்த பள்ளத்தை சீர் செய்ய வேண்டுமென மாநகராட்சிக்கு பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.