திருச்சி மாவட்டம், லால்குடி அடுத்த புள்ளம்பாடி அருகே எம். கண்ணனூர் தெற்கு தெருவை சேர்ந்தவர் 36 வயதான பிரிஜித்மாலா இவருடைய மகள் 9 வயதான மகிஷா, பிரஜித் மாலாவின் தங்கை மகன் வந்தலை சாலை பகுதியைச் சேர்ந்த 10 வயதான ஜோயல். மகிஷா மற்றும் ஜோயல் புள்ளம்பாடியில் உள்ள தனியார் பள்ளியில் நான்கு மற்றும் ஐந்தாம் வகுப்பு படித்து வருகின்றனர்.
இலையில் நேற்று பிரிஜித்மாலா தங்கை மகன் ஜோயல் மற்றும் மகள் மகிஷா ஆகிய மூவரும் லால்குடியில் இருந்து மோட்டார் சைக்கிளில் புள்ளம்பாடி நோக்கி திருச்சி சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலை சென்று கொண்டிருந்தனர். அதேபோல் அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் பகுதியைச் சேர்ந்த 56 வயதான சேட்டு ஒட்டி வந்த லாரி பின்னால் சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் இ.வெள்ளனூர் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது முன்னாள் சென்ற மோட்டார் சைக்கிள் மீது பின்னால் வந்த லாரி மோதி விபத்துக்குள்ளானது. இதில் பள்ளி மாணவன் ஜோயல் சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார்.பிரிஜித்மாலா மற்றும் மகிஷா இருவரும் படுகாயம் அடைந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த லால்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயம் பட்ட பிரிஜிம்மாலா மற்றும் மகிஷாவை மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சாலை விபத்தில் உயிரிழந்த ஜோயல் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்க்காக லால்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இந்த விபத்து லால்குடி போலீசார் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.