திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த பொய்கைப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட புதுப்பட்டியில் ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் கிராம மக்களின் உதவியோடு கடந்த 3 ஆண்டுகளுக்கு பின் பல்வேறு மரக்கன்றுகள் நடப்பட்டது. அதன்பின்னர் அது தொடர்ந்து பராமறிக்கப்படும் நிலையில் ஒவ்வொரு ஆண்டும் மரக்கன்று நட்ட தேதியில் அதற்கு பிறந்த நாள் விழா நடத்தப்பட்டு வருகின்றது. அதன்படி 3 ம் ஆண்டான இந்த ஆண்டும் இன்று மரங்களுக்கான பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. மக்கள் பிரதிநிதிகள், வேளாண் மற்றும் வனத்துறை அலுவலர்கள், சமூக ஆர்வலர்கள், இயற்கை பிரியர்கள், பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகள் உள்ளிட்ட பலரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர். பங்குத்தந்தை 3 வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் மரங்களுக்கு மாலை அணிவித்தார். இதைத் தொடர்ந்து முக்கியஸ்தர்களும் மரங்களுக்கு மாலை அணிவித்து மலர் தூவினர். பின்னர் மெழுகுவர்த்தி ஏத்தப்பட்டு
கேக் கொண்டாடி பிறந்த நாள் கொண்டாட்டங்கள் நடைபெற்றது. இதுமட்டுமின்றி கடந்த ஆண்டுகளில் பொதுமக்களுக்கு கொடுக்கப்பட்ட மரக்கன்றுகளில் சிறந்த முறையில் மரக்கன்றுகளை பராமறித்து வளர்த்து வருபவர்களை தேர்வு செய்து அவர்களுக்கும் பரிசுகளை வழங்கி ஊராட்சிமன்ற தலைவர் ரோஸ்லின்சகாயமேரி அசத்தினார்.