சர்தார் வல்லபாய் பட்டேலின் பிறந்த தினமான அக்டோபர் 31ம் தேதி ஒவ்வொரு ஆண்டும் அனைத்து அரசு அலுவலகங்களில் தேசிய ஒருமைப்பாட்டு நாள் உறுதிமொழி எடுக்கப்படுகிறது. இந்த ஆண்டு 31ம் தேதி தீபாவளி கொண்டாடப்படுவதால் அரசு விடுமுறை. எனவே இன்றைய தினமே தேசிய ஒருமைப்பாட்டு நாள் உறுதிமொழி எடுக்கப்பட்டது.
அதன்படி , தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம்(லிட்) திருச்சி அரசு போக்குவரத்துக் கழக மண்டல அலுவலகத்தில் திருச்சி மண்டல பொது மேலாளர் ஆ. முத்துகிருஷ்ணன், தலைமையில் அனைத்து போக்குவரத்து கழக பணியாளர்கள் தேசிய ஒருமைப்பாட்டு நாள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இதில் போக்குவரத்து கழக பணியாளர்கள் திரளாக பங்கேற்றனர்.