திருச்சியில் உள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம்(லிட்) மண்டல அலுவலகத்தில் போதைப் பொருள் தடுப்பு மற்றும் சட்டவிரோதக் கடத்தலுக்கு எதிரான சர்வதேச தினத்தையொட்டி இன்று போதைப் பொருள் தடுப்பு மற்றும் சட்ட விரோதக் கடத்தலுக்கு எதிரான உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடந்தது.
கும்பகோணம் கோட்ட மேலாண் இயக்குனர் க.சா .மகேந்திர குமார் தலைமையில் அனைத்து போக்குவரத்து கழக பணியாளர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் திருச்சி மண்டல பொது மேலாளர் ஆ .முத்துகிருஷ்ணன்,பொது மேலாளர்( தொழில்நுட்பம் கூட்டாண்மை ).நாசர் துணைமேலாளர்(
தொழில்நுட்பம்) கார்த்திகேயன், துணை மேலாளர் (பயிற்சி) சங்கர் , துணை மேலாளர் வணிகம் (பொறுப்பு ) புகழேந்தி,போக்குவரத்து கழக பணியாளர்கள் பங்கேற்று உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.