தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக திருச்சி மண்டலத்தின் சார்பில் தகவல் அறியும் உரிமைச் சட்ட விழிப்புணர்வு வார விழாவையொட்டி திருச்சியில் இன்று நடைபெற்ற மாரத்தான் போட்டியை கண்டோன்மென்ட் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவகுமார், அரசு போக்குவரத்து கழக மண்டல பொது மேலாளர் சக்திவேல், ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர். திருச்சி சென்ட்ரல் பஸ் ஸ்டாண்டில் துவங்கி மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகிலுள்ள அரசு போக்குவரத்து கழக மண்டல அலுவலகத்தில் நிறைவு பெற்றது. இப் போட்டியில் 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர் . மாரத்தான் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ், பரிசுகள் வழங்கப்பட்டது. மாரத்தான் போட்டியில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக திருச்சிராப்பள்ளி மண்டல பணியாளர்களும் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் துணை மேலாளர்கள் சங்கர் (வணிகம்), ரங்கராஜன், (பணியாளர் மற்றும் சட்டம்), கார்த்திகேயன், (தொழில்நுட்பம்), புகழேந்தி( நகரம்)உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்..