திருச்சி அருகே உள்ள கோப்பு கிராமத்தைச் சேர்ந்த ஜனா (எ) சோபியா (32) திருநங்கையான இவருக்கும் போசம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த வெங்கடேசன் (28) என்பவரும் நட்பாக பழகி வந்துள்ளது. இந்நிலையில் தனது இன்னொரு நண்பர் ஒருவருக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் வெங்கடேசன் தனது இரு சக்கர வாகனத்தில் சோபியாவையும் அழைத்துக் கொண்டு திருச்சி தோகைமலை சாலையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதித்து விட்டு. அருகே ஒத்தக்கடையில் உள்ள டாஸ்மார்க்கில் இருவரும் அளவுக்கு அதிகமாக மது அருந்திவிட்டு வெங்கடேசன் தனது இருசக்கர வாகனத்தை வேகமாக ஓட்டியதில் பின்பக்கம் அமர்ந்திருந்த சோபியா கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து சோமரசம்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.