திருச்சி எஸ்பி சுஜித் குமார் உத்தரவின் பேரில் திருவெறும்பூர் டிஎஸ்பி அறிவழகன் அறிவுரைப்படி போக்குவரத்து பிரிவு பிரிவு இன்ஸ்பெக்டர் நரேஷ் குமார் தலைமையில் சப் இன்ஸ்பெக்டர் சம்பத் போக்குவரத்து பிரிவு காவலர் இளமாறன் மற்றும் போக்குவரத்து பிரிவு போலீசார் எமதர்ம வேடம் தரித்து பொதுமக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நூதன முறையில் பிரச்சாரம் செய்ததோடு வாகன ஓட்டிகளுக்கும் பொது மக்களுக்கும் வாகனம் ஓட்டும்போது செல்போன் பேசக்கூடாது, மது அருந்திருக்க கூடாது, பேருந்துகளில் படிக்கட்டில் பயணிக்க கூடாது, பேருந்துகளை குறித்த இடத்தில் நிறுத்த
வேண்டும், பாதுகாப்பான வேகத்தில் வாகனங்களை இயக்க வேண்டும், லாரிகளையும் சரக்கு வாகனங்களையும் சாலையில் நிறுத்தக்கூடாது, வாகனங்களை உரிய முறையில் சரி செய்த பின்னரே இயக்க வேண்டும், இருசக்கர வாகன ஓட்டிகள் தலைக்கவசம் அணிய வேண்டும், காப்பீடு செய்து இருக்க வேண்டும் உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள். இதுபோல் திருவெறும்பூர் பகுதிகளில் அதிக விபத்துக்கள் நடக்ககூடிய திருவெறும்பூர் கடைவீதி, காட்டூர் அம்மன் நகர், காட்டூர் ஆகிய பகுதிகளில் நூதன முறையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினார்கள்.