திருச்சி ரயில்வே ஜங்ஷன் மேம்பால 2ம் கட்டப் பணிகள் தொடங்கப்பட இருப்பதால் திருச்சியில் நாளை(சனிக்கிழமை) நள்ளிரவு முதல் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
தஞ்சை, சென்னை, புதுக்கோட்டை, சேலம் மார்க்கத்தில் இருந்து திண்டுக்கல் செல்லும் கனரக வாகனங்கள் மதுரை பைபாஸ் சாலை வழியாக சென்று மணிக்டம், வண்ணாங்கோவில் வழியாக செல்ல வேண்டும். எதிர் வழித்தடத்திலும் இதே வழியயை பின்பற்ற வேண்டும்.
சென்னை, தஞ்சை, புதுகை, சேலம் வழித்தடங்களில் இருந்து திருச்சி மத்திய பஸ் நிலையம் வரும் பஸ்கள்( டவுன் பஸ்கள் தவிர) மன்னார்புரம், டிவிஎஸ் டோல்கேட், தலைமை தபால் நிலையம், ஒத்தக்கடை, அனைத்து மகளிர் போலீஸ் நிலையம், வெஸ்ட்ரி ரவுண்டானா, கலெக்டர் ஆபீஸ், மிளகுபாறை வழியாக செல்ல வேண்டும்.
மத்திய பஸ் நிலையத்தில் இருந்து சென்னை, தஞ்சை, சேலம் செல்லும் பஸ்கள் ஒத்தக்கடை, தலைமை தபால நிலைய சிக்னல், டிவிஎஸ் டோல்கேட் வழியாக செல்ல வேண்டும்.
மதுரையில் இருந்து மத்திய பஸ் நிலயம் வரும் பஸ்கள் மன்னார்புரம், அரிஸ்டோ மேம்பாலத்தில் உள்ள ரவுண்டானா வந்து ஜங்ஷன் வழியாக செல்லும் பாதையில் இறங்கி ஜங்ஷன் வழியாக செல்ல வேண்டும்.
மதுரை செல்லும் பஸ்கள் வஉசி சாலை, அரிஸ்டோ மேம்பாலம், மன்னார்புரம் வழியாக செல்ல வேண்டும்.
எடமலைப்பட்டி புதூர், கிராப்பட்டியில் இருந்து மத்திய பஸ் நிலையம் வரும் இரு சக்கர வாகனங்கள், கார்கள் அரிஸ்டோ மேம்பாலம் வழியாக ஜங்ஷன் செல்லும் பாதையில் இறங்கி செல்ல வேண்டும்.
பஸ் நிலையத்தில் இருந்து கிராப்பட்டி செல்ல மேம்பாலத்தில் ஏறி மன்னார்புரம் சென்று வரவேண்டும். இந்த போக்குவரத்து மாற்றம் அக்டோபர் 12 நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் என மாவட்ட கலெக்டர் எம். பிரதீப் குமார் தெரிவித்துள்ளார்.