திருச்சி தில்லை நகா் செங்குளத்தான் கோயில் தெருவைச் சோ்ந்தவா் சு. பேச்சிமுத்து (49). இவர் சுமை தூக்கும் தொழிலாளி. திருச்சி தில்லை நகா் 80 அடி சாலை பகுதியில் உள்ள ஒரு தனியாா் மின் பொருள்கள் விற்பனை நிறுவனக் கிடங்கில் (குடோன்) சுமை தூக்கும் தொழிலாளியாக பணிபுரிந்து வந்தார்.
இந்நிலையில் சனிக்கிழமை வாஷிங் மிஷினை சுமந்து சென்றபோது, மிஷினுடன் பேச்சிமுத்தும் தவறி கீழே விழுந்துள்ளார். இதில் பலத்த காயமடைந்த அவரை திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த அவா் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். இதுகுறித்து தில்லை நகா் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.