Skip to content
Home » திருவெறும்பூர் அருகே பெல் நிறுவன சொசைட்டி தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டம்..

திருவெறும்பூர் அருகே பெல் நிறுவன சொசைட்டி தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டம்..

  • by Senthil

திருச்சி, திருவெறும்பூர் அருகே உள்ளது பெல் நிறுவனம் இங்கு நேரடியாக பல ஆயிரம் தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். பெல் வட்ட கூட்டுறவு சொசைட்டி மூலம் தொழிற்சாலையின் பல்வேறு பணிகளுக்கு சுமார் 40 வருடங்களுக்கு மேலாக சுமார் 700 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தற்பொழுது பணிபுரிந்து வருகின்றனர்.

இவர்களுக்கு மாதம் சுமார்ரூ 24 ஆயிரம் மட்டுமே ஊதியமாக வழங்கப்பட்டு வருகின்றது. இதனால் தங்களது வாழ்க்கையை மேம்படுத்திக் கொள்ள முடியாமல் இத்தகைய தொழிலாளர்கள் மிகவும் கஷ்டப்பட்டு வருகின்றனர். இவர்கள் தங்களை நிரந்தர தொழிலாளராக நிர்வாகம் பணியமர்த்த தொடர்ந்து போராடி வருகின்றனர்.

தற்பொழுது பெல் நிர்வாகம் தங்களை கொத்தடிமைகளாக நடத்தப்பட்டு வருவதை கண்டித்து வேலை நிறுத்த கடிதத்தை டிசம்பர் மாதம் 13 ம்தேதி மாலை பெல் நிர்வாகத்திடம் சொசைட்டி தொழிலாளர்கள் கூட்டமைப்பு சார்பில் ஸ்ட்ரைக் நோட்டீஸ் கொடுத்தனர். இதுவரை பெல் நிர்வாகம் அழைத்து பேசவில்லை இந்நிலையில் இன்று அனைத்து சொசைட்டி தொழிற்சங்கங்கள் கூட்டமைப்பின் சார்பில் வேலை நிறுத்த போராட்டம் செய்யப் போவதாக தொழிற்சங்க கூட்டமைப்பினர் நேற்று அறிவித்தனர்.

பெல் நிறுவன நிர்வாகம் அழைத்து பேசாததால் இன்று முதல் பெல் நிறுவன மெயின் கேட் முன்பு போராட்டத்தை துவக்கியுள்ளனர். போராட்டத்திற்கு தொமுச நடராஜன் தலைமை வகித்தார். திராவிடர் கழக மாநில தொழிலாளர் அணி செயலாளர் மு சேகர், அம்பேத்கர் யூனியன் முருகேசன், சிஐடியு சங்கம் செல்வராஜ், ஐ என்டியூ சி சங்க பூபதி, எம்எல்எப் முருகானந்தம், ஏடிபி ரமேஷ்,பி எம் எஸ் மலையப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்ட தொழிற்சங்கத்தினர் கூறுகையில் பெல் நிறுவனம் சொசைட்டி தொழிலாளர்களை ராணிப்பேட்டை நிறுவனத்தில் ஒரு வகையாகவும் திருச்சி நிறுவனத்தில் வேறு வகையிலும் நடத்தி வருகிறது கண்டிக்கத்தக்கதாகும் 14 ஆண்டுகளாக ஊதிய உயர்வு இன்றி நாங்கள் பணி புரிந்து வருகின்றோம் எங்களுக்கு குறைந்த பட்சம் மருத்துவ வசதி கூட கொடுக்க நிர்வாகம் மறுத்து வருகிறது ஆகவே

இன்று முதல் கால வரையற்ற வேலை நிறுத்தம் போராட்டத்தை தொடங்கி விட்டோம், இன்று மதியத்திற்குள் நிறுவன நிர்வாகம் எங்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தவில்லை என்றால் அடுத்த கட்ட போராட்டத்தை கூடி பேசி முடிவு செய்வோம் என்றனர். போராட்டத்தில் 600 பேர் வரை கலந்து கொண்டனர்.பாதுகாவல் பணி, மருத்துவ பணியில் சில தொழிலார்களை தவிர மீதி அனைத்து தொழிலாளர்களும் வேலைநிறுத்த போராட்டத்தில் கலந்து கொண்டனர்,பெல் நிறுவனத்தில் சொசைட்டி தொழிலாளர்கள் துப்புரவு பணி உணவகம் ஸ்டோர் சிவில் மருத்துவமனை டவுன்ஷிப் ஒயிட் வாஸ் உற்பத்திக் கூடங்கள் ஆகிய பல்வேறு பிரிவுகளில் பணி செய்து வந்தனர் இவர்களது வேலை நிறுத்த போராட்டம் பெல் நிறுவனத்தில் பல பிரிவுகளில் வேலை பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!