திருச்சி, திருவெறும்பூர் பகுதியில் ஆடு திருடிய மூன்று பேரை திருவெறும்பூர் போலீசார் கைது செய்ததோடு அவர்களிடமிருந்து நான்கு ஆடுகளை பறிமுதல் செய்துள்ள நிலையில் 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் தங்களது ஆடுகளை காணவில்லை எனக் கூறி திருவெறும்பூர் காவல் நிலையத்திற்கு படையெடுப்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
திருவெறும்பூர் பகுதியில் நேற்று இரவு திருவெறும்பூர் போலீசார் நடராஜபுரம், கூத்தைப்பார் உள்ளிட்ட பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது 4 ஆடுகளை திருடி கொண்டு இருசக்கரக வாகனங்களில் வந்த மூன்று பேரை திருவெறும்பூர் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து நான்கு ஆடுகளை பறிமுதல் செய்ததோடு அவர்கள் மூன்று பேரையும் திருவெறும்பூர்
போலீஸ் ஸ்டேசனில் வைத்து விசாரணை செய்து வருகின்றனர். இச்சம்பவம் திருவெறும்பூர் சுற்றுவட்ட பகுதியை சேர்ந்த கிராமங்களுக்கு காட்டுத் தீயை போல் பறவியது.
அதனை தொடர்ந்து திருவெறும்பூர் பகுதியில் ஏற்கனவே ஆடுகளை பறிகொடுத்தவர்கள் திருவெறும்பூர் காவல் நிலையத்திற்கு சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் தங்களது ஆடுகள் திருட்டுப் போய் உள்ளதாக கூறி படையெடுத்து வருவதால் திருவெறும்பூர் போலீசாருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. எழும்பூர் பகுதியில் தொடர் ஆடு திருட்டுகளின் சம்பவங்களில் ஈடுபட்டது இவர்கள்தானா அல்லது வேறு ஏதேனும் கும்பல்கள் உள்ளதா எனதிருவெறும்பூர் போலீசார் விசாரணை செய்து வருவதுகின்றனர். இச்சம்பவம் திருவெறும்பூர் காவல் நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.