திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் வட்டம், திருவானைக்கோவில் அழகிரிபுரம்,செக்போஸ்ட் பகுதியைச் சேர்ந்த லதா,என்பவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு கொடுத்தார். அந்த மனுவில்கடந்த 80 ஆண்டு காலமாக அப்பகுதியில் வசித்து வருவதாகவும் தற்போது அப்பகுதியைச் சேர்ந்த சண்முகத்திற்கும் மனுதாரர் லதா என்பவருக்கும் ஏற்பட்ட இட பிரச்சனையின் காரணமாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
இதனால் மேற்படி சண்முகத்தின் அண்ணன் வீரமுத்து என்பவர் அப்பகுதி ஊர் தலைவர் பொறுப்பில் உள்ளார் இதனால் அங்கு நடைபெற உள்ளஸ்ரீ கருப்பண்ணசாமி ஸ்ரீ ராய முனீஸ்வரி ஸ்ரீ சங்கிலி கருப்பு ஸ்ரீ மதுரை வீரன் ஆகிய தெய்வங்களுக்கு 59 ஆம் ஆண்டு திருவிழா மற்றும் துறை பொங்கல் திருவிழா நடைபெற உள்ளது,
இந்த திருவிழாவை முன்னிட்டு இவர்கள் குடும்பத்தை சார்ந்தவர்களை கோவில் திருவிழாவிற்கு வசூலிக்கப்படும் நன்கொடையை வாங்க மறுத்து ஊர் மக்களிடம் இவர்கள் குடும்பத்துடன் பேசக்கூடாது என்று கூறியதாகவும் இதனால் யாரும் இவர்கள் குடும்பத்தில் பேசுவது இல்லை என்று கோயிலுக்கும் செல்ல முடியாமலும் திருவிழாவில் கலந்து கொள்ள முடியாமல் மன வருத்தத்துடன் உள்ளதாக தெரிவித்தனர் மேலும் இது சம்பந்தமாக மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.