திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே திருப்பைஞ்சீலியில் பிரசித்திபெற்ற ஞீலிவனேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் திருமண தடை நீங்க கல்வாழை பரிகாரா ஸ்தலமாக விளங்குகிறது.
இக்கோயிலுக்கு தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்களிலிருந்தும் பக்தர்கள் வருகை தருவர். இதனிடையே இக்கோயிலுக்கு அதிகளவு பக்தர்கள் வாகனங்களில் வருவதாலும், மண்ணச்சநல்லூர் திருப்பைஞ்ஞீலீ சாலையில் கோயில் உள்ளதால் பிரதான சாலையாக அமைந்துள்ளது.
மேலும் திருச்சி – சேலம் நெடுஞ்சாலையில் விபத்துகள் ஏற்பட்டால் வாகனங்கள் அனைத்தும் வாத்தலை சிறுகாம்பூர் வழியாக திருப்பைஞ்ஞீலீ சென்று மண்ணச்சநல்லூர் வழியாக திருச்சிக்கு செல்லவேண்டிய நிலை இருப்பதால் திருப்பைஞ்ஞீலீ கடைவீதியில் சாலையோரம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த கடைகள் மற்றும் கட்டிடங்களை இடிக்க நெடுஞ்சாலை துறை சார்பில் முடிவு செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து நெடுஞ்சாலைதுறை சார்பில் திருப்பைஞ்ஞீலீ கடைகள் மற்றும் வீடுகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டிருந்தது.
இதையடுத்து ஒருவழி சாலையாக இருப்பதை இருவழி சாலையாக மாற்றும் வகையில் சாலை விரிவாக்க பணிகள் கடந்த சில வாரங்களுக்கு முன்பு தொடங்கினார். இதில் ஒருசிலர் கடைகளின் மேற்கூரை மற்றும்
சாலையோரமாக இருந்த ஆக்கிரமித்து இடத்தை அகற்றாததால் சாலை விரிவாக்க பணியை நெடுஞ்சாலை உதவிகோட்ட பொறியாளர் பாலசுந்தரம், உதவி பொறியாளர் கஜலட்சுமி , மண்ணச்சநல்லூர் வட்டாட்சியர் அருள்ஜோதி.மற்றும் சர்வேயர், விஏஓ ஆகியோர் பார்வையில் மண்ணச்சநல்லூர் காவல் ஆய்வாளர் ரகுராம் தலைமையில் போலீசார் பாதுகாப்புடன் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.