திருச்சி மாவட்டம், துவாக்குடி அருகே உள்ள திருநெடுங்குளத்தில் திருஞானசம்பந்தரால் பாடல் பெற்ற தலமான அருள்மிகு ஒப்பில்லா நாயகி உடனுறை அருள்மிகு திரு நெடுங்களநாதர் திருக்கோவில் உள்ளது.
இந்தக் கோவிலில் நாளை (22.02.2024) 10ம் ஆண்டு ஷம்சத்ரா அபிஷேக விழா நடைபெற உள்ளது.
இதனை முன்னிட்டு காலை 8:30 மணிக்கு அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, புண்ணியவாகனம், கலச பூஜை, 108 சங்கு பூஜை மற்றும் யாக வேள்வியுடன் ஸம்வஸ்தரா அபிஷேக விழா தொடங்குகிறது.
இதனைத் தொடர்ந்து 9மணிக்கு செல்வ விநாயகர், வள்ளி, தெய்வானை, சுப்பிரமணியர், திரு நெடுங்கநாதர் மங்களாம்பிகை மற்றும் உற்சவ பஞ்சமூர்த்திகள், நால்வருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற உள்ளது.
மதியம் 12 மணிக்கு மகாபூர்ணாஹூதி, மகாதீபாரதனை, மூலவருக்கு கலச பூஜை, 108 சங்காபிஷேகம் நடைபெற உள்ளது.
இதனைத் தொடர்ந்து பஞ்ச மூர்த்திகள் நால்வர் சேக்கிழார் ஆகியோருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாலனை நடைபெற உள்ளது. இதில் பக்தர்கள் கலந்து கொண்டு இறைவனின் அருள் பெற வேண்டுமாய் கோவில் செயல் அலுவலர் மற்றும் கோவில் சிவாச்சாரியார்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.